திருவள்ளூர் மாவட்டத்தில் 23ல் கிராம சபை கூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும், வரும் 23ல் கிராம சபை கூட்டம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 1ல் நடக்க இருந்த கிராம சபை கூட்டம், அனைத்து ஊராட்சிகளிலும், வரும் 23ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.கூட்டத்தில், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவி குழுவினரை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல்.துாய்மை பாரத இயக்க திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும்.கிராம சபையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் பங்கேற்பது முக்கிய கடமை. மேலும், கிராம சபை கூட்ட விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.