உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் படகு சவாரி செய்ய தடை மீறினால் சட்ட நடவடிக்கை பாயும்

ஏரியில் படகு சவாரி செய்ய தடை மீறினால் சட்ட நடவடிக்கை பாயும்

பழவேற்காடு, பழவேற்காடு சுற்றுலா தலமாக திகழ்வதால், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்கள் கடலில் குளிப்பது, தடையை மீறி படகு சவாரி செய்வது போன்ற செய்கைகளால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.குறிப்பாக காணும் பொங்கல் தினத்தில், 30,000க்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். அச்சமயங்களில் அசம்பாவிதங்கள் தொடர்கிறது.இன்று காணும் பொங்கல் என்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கருதியும், திருப்பாலைவனம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.சுற்றுலா பயணியரை எச்சரிக்கும் வகையில், மீன் இறங்குதளம், லைட்ஹவுஸ், சாட்டன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் குளிக்க மற்றும் படகு சவாரிக்கு தடை குறித்த அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.அதில், 'பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. படகு சவாரி செய்வது உயிருக்கு ஆபத்தானது. படகு சவாரிக்கு அழைத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 'அதே போல், கடலில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி