உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவேகானந்தர் பிறந்தநாள் விழா விழிப்புணர்வு பேரணி  

விவேகானந்தர் பிறந்தநாள் விழா விழிப்புணர்வு பேரணி  

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை விவேகானந்தா மெட்ரிக்., மேனிலைப் பள்ளி சார்பில், விவேகானந்தரின், 162வது பிறந்தநாளை ஒட்டி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளியில் துவங்கிய பேரணியில் தாளாளர் ரங்கநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி திருவள்ளூர் சாலை, பஜார் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், ‛பொறாமையை அழித்துவிடு, இதயம் சொல்வதை செய், வெற்றியோ, தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு உண்டு' ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர். இதில் விவேகானந்தர் போல் வேடமிட்டு பேரணியில் சென்ற மாணவர்களை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். இதில் விவேகானந்தா கல்விக்குழும செயலாளர் அவந்திகாராஜேஷ், நிர்வாக அலுவலர் சுதர்சனன், தலைமையாசிரியர்கள் பாஸ்கர், ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி