உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாட்கோ வாயிலாக தொழிற் பயிற்சி

தாட்கோ வாயிலாக தொழிற் பயிற்சி

திருவள்ளூர்:ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தோருக்கு 'தாட்கோ' வாயிலாக, தொழிற் பயிற்சி வழங்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தோருக்கு, 'தாட்கோ' வாயிலாக, கிடங்கு மேலாண்மை, கிடங்கு 'பிக்கர்' மற்றும் 'பேக்கர்' ஆகிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கிடங்கு மேலாண்மை பயிற்சிக்கு டிப்ளமோ, மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி; கிடங்கு 'பிக்கர்' மற்றும் 'பேக்கர்' பயிற்சிக்கு 10, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் 3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி முடித்த உடன், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் வாயிலாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர், www.tahdco.comஎன்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை