| ADDED : டிச 04, 2025 05:19 AM
திருவாலங்காடு: தொழுதாவூரில் குடிநீர் வினியோகம் செய்யும் பைப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. திருவாலங்காடு, ஒன்றியம் தொழுதாவூர் கிராமத்தில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மணவூர் சாலையில், ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு அங்கிருந்து நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப் வாயிலாக கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு குழாய் வாயிலாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகிக்கிறது. இந்நிலையில், மணவூர் சாலையில் சுடுகாடு அருகே நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பைப்பில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் குடிநீர் பைப் அருகே கழிவுநீர் செல்வதால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.