உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துாய்மை பணியாளர் 70 பேருக்கு நல உதவி

துாய்மை பணியாளர் 70 பேருக்கு நல உதவி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 70 துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, துாய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. தமிழக துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 70 துாய்மை பணியாளர்களுக்கு, அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கினார்.பின் அவர் கூறியதாவது:நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து உதவிகளும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும். மழை காலம் மற்றும் இயற்கை பேரிடர் காலத்தில், 'ரெயின் கோட்' முறையாக வழங்க வேண்டும். மாத ஊதியம் அரசு நிர்ணயித்தபடி வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, உள்ளாட்சி அலுவலகங்களிலும், நல வாரியத்திற்கு என்று தனி பொறுப்பு வழங்க வேண்டும்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, தனியார் பள்ளி மற்றும் திருமண மண்டபத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டம் திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில், நேற்று 20 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் இலவச மூன்று சக்கர ஸ்கூட்டர், 37 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா போன்ற நலதிட்ட உதவிகளை திருத்தணி தி.மு.க.,-எம்.எல்.ஏ., சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், துணை தாசில்தார் தேவராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கமல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை