உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாட்கோ துாய்மை பணியாளர்களுக்கு நல வாரிய ஸ்மார்ட் அடையாள அட்டை

தாட்கோ துாய்மை பணியாளர்களுக்கு நல வாரிய ஸ்மார்ட் அடையாள அட்டை

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், 'தாட்கோ' வாயிலாக, துாய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்கப்பட்டது.'தாட்கோ' வாயிலாக துாய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களின் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக துாய்மை பணியாளர் நல வாரியம் அமைத்துள்ளது.இந்த திட்டத்தினை, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தூய்மைப் பணியாளர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி போன்ற உதவி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான, அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற பொருளாதார மேம்பாட்டு உதவி கிடைக்கும்.திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள், ஹோட்டல், திருமண மண்டபம், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைத்து துாய்மை பணியாளர்கள் என, 358 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு, 'தாட்கோ' வாயிலாக, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.நகராட்சி தலைவர் உதயமலர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட தாட்கோ மேலாளர் சரண்யா பங்கேற்று, முதல் கட்டமாக, 117 பேருக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டையினை வழங்கினார். மீதம் உள்ளோருக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என, அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை