உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீடு வழங்கும் திட்டம் தெரிவிக்காதது ஏன்? பொன்னேரி நகராட்சி கவுன்சிலர்கள் விவாதம்

வீடு வழங்கும் திட்டம் தெரிவிக்காதது ஏன்? பொன்னேரி நகராட்சி கவுன்சிலர்கள் விவாதம்

பொன்னேரி,:பொன்னேரி நகராட்சியில் நேற்று, கவுன்சிலர்கள் அவசர கூட்டம், நகரமன்ற தலைவர் டாக்டர் பரிமளம் தலைமையில் நடந்தது. கமிஷனர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.'மிக்ஜாம்' புயலின் போது பாதிக்கப்பட்ட, 122 வீடுகள் பழுது பார்த்தல் மற்றும் 12 புதிய வீடுகள் கட்டுதல் திட்டப்பணிகளுக்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் துறையின் வாயிலாக, 2.92 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்தற்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியாமல் நடைபெறுவதாகக் கூறி , அ.தி.மு.க, வை சேர்ந்த துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் அ.தி.மு.க, கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனரிடம் கடும் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்படுதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வரும் நிலையில், அந்தந்த பகுதியில் உள்ள கவுன்சிலர்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தாதது ஏன்? என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.தலைவர் மற்றும் கமிஷனரிடம் இருந்த சரியான பதில் ஏதும் வராத நிலையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினர். இதுகுறித்து துணைத் தலைவர் விஜயகுமார் கூறியதாவது:நகராட்சியில் மேற்கொள்ளப்படும் எந்த பணிகளுக்கும் கவுன்சிலர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை. நேரடியாக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தற்போது நகராட்சி பகுதியில், 1.30 கோடி ரூபாயில் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்தும் எந்த தகவலும் இல்லை. கேட்டால் சரியான பதில் அளிப்பதில்லை.புயல் மழையின்போது, ஒவ்வாரு கவுன்சிலரும் மக்களுக்கு சேவை புரிந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது குறித்து கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தவில்லை.தி.மு.க., வைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதற்காக மறைமுக பணிகள்நடைபெறுகிறது. அந்தந்த கவுன்சிலர்கள் மீது மக்கள் அதிருப்தி அடைய வேண்டும் என்பதே நகராட்சியின் நோக்கமாக உள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை