உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

ஆரம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

கும்மிடிப்பூண்டி:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திர எல்லை முடிந்து தமிழக எல்லை துவங்கும் இடத்தில், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதி உள்ளது. அந்த இடத்தில் உள்ள இணைப்பு சாலையின் பெரும் பகுதியை சாலையோர கடைகள் ஆக்கிரமித்துள்ளன.ஆக்கிரமித்த கடைகள், தேசிய நெடுஞ்சாலையின் இரும்புத்தடுப்பில் இருந்து தார்பாய் விரித்து கடைகளுக்கான மேற்கூரையை அமைத்துள்ளனர். ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வேறு இடம் ஒதுக்காததால், இணைப்பு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழைபவர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில், பொலிவு இழந்த சூழல் வரவேற்கிறது. ஆரம்பாக்கம் பகுதியில், சாலையோர கடைகளுக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, இணைப்பு சாலையில் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் வராதபடி ஆரம்பாக்கம் போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ