உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடையை சூழ்ந்த செடிகள் அகற்றப்படுமா?

நிழற்குடையை சூழ்ந்த செடிகள் அகற்றப்படுமா?

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் அடுத்து அமைந்துள்ளது ஆற்காடுகுப்பம் கிராமம். இங்கு, சோளீஸ்வரர் கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.இந்த நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்த நிலையில், சில மாதமாக நிழற்குடையை சூழ்ந்து செடிகள் வளர்ந்துள்ளன.இதனால் பயணியர், நிழற்குடையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மேலும், மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பாக நிற்க அமைக்கப்பட்ட நிழற்குடை பயன்பாடின்றி உள்ளது.எனவே, பயணியர் நிழற்குடையை சூழ்ந்துள்ள செடிகளை அகற்றி, பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ