வாட்டர் ஹீட்டர் பட்டனை அழுத்திய பெண் உயிரிழப்பு
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி அஸ்வினி, 31. இவர், நேற்று காலை 'வாட்டர் ஹீட்டர்' உதவியுடன் தண்ணீர் காய்ச்சுவதற்காக, அதன் பட்டனை அழுத்தியபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.