மேலும் செய்திகள்
லுங்கியில் கால் சிக்கி விழுந்தவர் உயிரிழப்பு
08-Mar-2025
திருவாலங்காடு:பெரியபாளையம் அடுத்த ஸ்ரீபதி நகர் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 55. இவர், நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள மகளை பார்ப்பதற்காக, மனைவி அருணாவை, 50, தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.மகளை பார்த்துவிட்டு, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆற்காடுகுப்பம் அடுத்த ரகுநாதபுரம் அருகே வந்தபோது, அருணாவின் புடவை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது.இதில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அருணா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து, ஜெகதீசன் அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
08-Mar-2025