உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாக்குவாதத்தால் கத்திக்குத்து பெண் படுகாயம்

வாக்குவாதத்தால் கத்திக்குத்து பெண் படுகாயம்

ஆர்.கே.பேட்டை:வயல்வெளியில் இருந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்த நபர் கத்தியால் தாக்கியதில், பெண் காயமடைந்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த செங்கட்டானுாரை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி பரிமளா, 39. இவர் நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள வயல்வெளியில் இருந்தார். அங்கு வந்த மயிலாடும்பாறையை சேர்ந்த பிரகாஷ், 27, என்பவர், பரிமளாவிடம் தகராறு செய்தார். பரிமளாவை பிரகாஷ் கத்தியால் தாக்க முயன்றார். பரிமளா தடுக்க முயன்றதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து பரிமளா அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரகாசுக்கு பரிமளா கொலை மிரட்டல் விடுத்ததாக பிரகாஷ் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி