உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்த பெண்கள்

சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்த பெண்கள்

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் செருக்கனுார், வீரகநல்லுார், கார்த்திகேயபுரம், பெரியகடம்பூர், அகூர், திருத்தணி, சூர்யநகரம், முருக்கம்பட்டு மற்றும் அலுமேலுமங்காபுரம் ஆகிய ஊராட்சிகளில் இயங்கி வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மொத்தம் 13 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, கலெக்டர் அறிவித்தார். மேலும், நேற்று முதல் வரும் 29ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.இதற்காக, நேற்று காலை திருத்தணி ஒன்றிய அலுவலக நுழைவு பகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட சமையல் உதவியாளர் விண்ணப்பங்கள் வழங்க வசதியாக, பெட்டி தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.காலை 9:30 - மாலை 5:30 மணி வரை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பெட்டியில் பெண்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை போட்டனர். நேற்று மட்டும், 80க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பெட்டியில் விண்ணப்பங்கள் போட்டனர்.வரும் 29ம் தேதி மாலை 5:45 மணி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வழங்கலாம் என, ஒன்றிய அதிகாரி தெரிவித்தார்.அதேபோல், கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 22 சத்துணவு உதவியாளர் பணிக்கு, எட்டு பேர் மனு செய்ததாக ஒன்றிய அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை