மேலும் செய்திகள்
விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்
19-Feb-2025
கும்மிடிப்பூண்டி:மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு பகுதியில் வசித்தவர் ராஜி, 53; கூலித்தொழிலாளி. நேற்று மாலை தச்சூரில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், புதுரோடு - புதுவாயல் இணைப்பு சாலையில் சென்றபோது தடுமாறி விழுந்துள்ளார்.அப்போது, அருகில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19-Feb-2025