உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

கூட்டுறவு துறை காலி பணியிடம் வரும் 11ம் தேதி எழுத்து தேர்வு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கான எழுத்து தேர்வு, வரும் 11ம் தேதி நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சண்முகவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட் ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில், காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கான எழுத்து தேர்வு, வரும் 11ம் தேதி வேப்பம்பட்டு ஸ்ரீராம் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது . மேலும் விபரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 73387 49121 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை