லாரி மீது லோடு வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு
கனகம்மாசத்திரம்: கனகம்மாசத்திரம் அருகே லாரி மீது லோடு வாகனம் மோதிய விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிப்பட்டு அடுத்த ராஜாநகரத்தைச் சேர்ந்தவர் கோபி, 25. இவர், ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று அதிகாலை பணி முடிந்து, 'ஈச்சர்' லோடு வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்த ரகுநாதபுரம் அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது லோடு வாகனம் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே கோபி உயிரிழந்தார். லோடு வாகனத்தின் முன்பகுதி சுக்குநுாறாக நொறுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார், சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.