உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் மோதி வாலிபர் பலி

பைக் மோதி வாலிபர் பலி

திருத்தணி:ஆந்திர மாநிலம் நகரி தேசம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முனிவேல், 37. தச்சுத் தொழிலாளி. இவர் நேற்று திருத்தணி பஜாருக்கு, பரணி 10, ரூபேஷ் 8 என்ற இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்தார். பின் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக நகரி நோக்கி சென்றார். திருத்தணி அடுத்த பொன்பாடி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, எதிர் திசையில் திருத்தணி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயம் அடைந்த முனிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். பரணி, ரூபேஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர். எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பதி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் 30, மகன் அமர்நாத் 12 இருவரும் படுகாயம் அடைந்தனர்.திருத்தணி போலீசார் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை