உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் - ஆட்டோ மோதல் வாலிபர் படுகாயம்

பைக் - ஆட்டோ மோதல் வாலிபர் படுகாயம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த கீழ் மோசூர் கிராமத்தைச் சேர்நதவர் புருஷோத்தமன், 35. இவர், நேற்று ஆர்.கே.பேட்டையில் இருந்து அம்மையார்குப்பம் நோக்கி 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, ஆர்.கே.பேட்டை டாஸ்மாக் கடை அருகே, பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில், படுகாயமடைந்த புருஷோத்தமனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி