உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருவாாரூர்:திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, காவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுசூதனன், 42. இவர், பா.ஜ., விவசாய அணியின் திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். நாகை லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளருக்கு தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை பிரித்துக்கொள்வதில்,பாஸ்கரனுக்கும், மதுசூதனனுக்கும் முன்விரோதம் இருந்ததாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.இந்நிலையில், கடந்த 8 இரவு,7:45 மணிக்கு, குடவாசல் அருகே ஓகையில், கடை ஒன்றின் முன் மதுசூதனன் நின்ற போது, இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கும்பல், மதுசூதனனை சரமாரியாக வெட்டி தப்பியது.மதுசூதனன் மனைவி ஹரிணி, குடவாசல் போலீசில், மாவட்டத்தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலர் செந்தில் அரசன் மற்றும் நான்கு பேர் மீது புகார் கொடுத்தார். அதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, எஸ்.பி., ஜெயக்குமார் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார், ஏற்கனவே மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.செந்தில்அரசனை தேடி வந்தனர். அவர், தேனியில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், நேற்று, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்