மேலும் செய்திகள்
பூசாரிகளுக்கு இலவசமாக மாடு வழங்கிய அமைச்சர்
25-Feb-2025
காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்டம்
12-Mar-2025
நன்னிலம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, கந்தன்குடி சுப்ரமணியர் கோவில் அர்ச்சகர் வீட்டில் பெண் ஒருவர், ஓராண்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10ம் தேதி உடல்நிலை சரியில்லாததால், பிளஸ் 2 படிக்கும் தன், 17 வயது மகளை அர்ச்சகர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அர்ச்சகர், கோவில் மடப்பள்ளி பாத்திரங்களை எடுத்து வரும்படி சிறுமியிடம் கூறியுள்ளார். சிறுமி கோவிலுக்கு சென்றபோது, அங்கு சாமி கும்பிட வந்த நெடுஞ்சேரியைச் சேர்ந்த ராமநாதன், 32, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தாயிடம் சிறுமி தெரிவித்தார். நன்னிலம் மகளிர் போலீசார் ராமநாதனை போக்சோவில் கைது செய்தனர்.
25-Feb-2025
12-Mar-2025