மேலும் செய்திகள்
வாலிபருக்கு கத்திக்குத்து போதை நபர்கள் சிக்கினர்
13-Aug-2025
திருவாரூர்: திருவாரூர் அருகே, வாலிபரை, வீடு புகுந்து தாக்கிய தி.மு.க., கவுன்சிலர் உட்பட, 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருவாரூர் மாவட்டம், சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கிஷோர், 20. இவரது சித்தி மகாலட்சுமி, அப்பகுதியில், பழைய வீடு வாங்கியுள்ளார். வீட்டில் பெயின்ட் அடிக்கும் பணி நடக்கிறது. இவரது வீட்டின் முன், அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் புருஷோத்தமன், 45, மற்றும் அவரது தரப்பினர், கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பான பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். வீட்டின் முன், பிளக்ஸ் போர்டு வைக்காதீர்கள் என, கிஷோர் தெரிவித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த புருஷோத்தன் உட்பட, 12க்கும் மேற்பட்டோர், ஆக., 23ல் வீடு புகுந்து, கிஷோரை தாக்கி, வீட்டில் இருந்த, 35,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தினர். கிஷோர் புகாரில், திருவாரூர் போலீசார், புருஷோத்தமன் உட்பட, 12க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்தனர். புருஷோத்தமனும் புகார் அளித்தார். இரு தரப்பினர் உட்பட, 75 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
13-Aug-2025