உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / திருவாரூரில் பலத்த சத்தம் கேட்டது ஏன்? கலெக்டர் விளக்கம்

திருவாரூரில் பலத்த சத்தம் கேட்டது ஏன்? கலெக்டர் விளக்கம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. மாவட்டத்தில் மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிர்வும் உணரப்பட்டது. இதனால், நில அதிர்வு உணரப்பட்டதாக கூறி பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச் சந்திரன் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இதனால், சத்தம் எழுந்தது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை பயிற்சி நடந்தது. நில அதிர்வு இல்லை. பொது மக்கள் பீதி அடையத் தேவையில்லை. இவ்வாறு அந்த விளக்கத்தில் கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை