உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் அதிமுக.,வேட்பாளர் பயோடேட்டா

செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் அதிமுக.,வேட்பாளர் பயோடேட்டா

திருச்செந்தூர் :திருச்செந்தூர் தலைவர் பதவிக்கு அதிமுக.,சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாபு(40) வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்துள்ளது.கட்சியில் இவர் 1982 முதல் ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். முழு நேரமும் கட்சி பணியாற்றியுள்ளார். 1992ல் இவர் திருச்செந்தூர் நகர எம்ஜிஆர்., இளைஞரணி செயலாளர் ஆனார். அதன்பின் 1998ல் திருச்செந்தூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆனார். தற்போது 2011ல் திருச்செந்தூர் ஒன்றிய ஜெ., பேரவை செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இப்பொழுது இவர் அதிமுக.,சார்பில் திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை