உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கண்மாய் சுவரைசீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கண்மாய் சுவரைசீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டி இனாம் மணியாச்சி கண்மாயில் இடிந்து விழுந்த தடுப்பு சுவரை கட்ட கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோவில்பட்டி இனாம் மணியாச்சி அருகில் கண்மாயில் வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் இருக்க கடந்த ஆறுமாதத்திற்கு முன்னர் ரூபாய் 5 லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அந்த சுவர் கண்மாய் நீர் வற்றியதும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் கண்மாயில் நீர் பெருகும்முன் தடுப்பு சுவரை கட்ட வேண்டுமென விவசாய சங்க ஒன்றிய செயலாளர் உத்தண்டராமன் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ரத்தினவேல், அழகுமுத்து, சுந்தரம் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை