உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 17 வயது சிறுமி பலாத்காரம்; நண்பர்களுடன் வாலிபர் கைது

17 வயது சிறுமி பலாத்காரம்; நண்பர்களுடன் வாலிபர் கைது

துாத்துக்குடி; துாத்துக்குடியில், 17 வயது சிறுமியை வாலிபர் பலாத்காரம் செய்த நிலையில், அந்த வீடியோவை வெளியிடுவதாக அவரது நண்பர்கள் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன்மடத்தைச் சேர்ந்த வசந்த், 21, என்ற வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளனர். கடந்த 2023ல் காமராஜ் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற வசந்த், அவரை பலாத்காரம் செய்துள்ளார்.சில நாட்களில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறுமி வீட்டில் இருந்தபோது, அங்கு சென்ற வசந்தின் நண்பரான பொன் முத்துக்குமார், 22, சிறுமியை மிரட்டியுள்ளார். வசந்துடன் தனியாக இருந்த வீடியோ, தன்னிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, கடந்த 26ம் தேதி சிறுமி வீட்டிற்கு சென்ற வசந்தின் மற்றொரு நண்பரான மதன்குமார், 21, குடிபோதையில் தகராறு செய்துள்ளார். 'வசந்துடன் தனியாக இருந்த வீடியோ என்னிடம் உள்ளது. அதை, நண்பர்களான சக்திகுமார், 29, பொன்மாடசாமி, 28, மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனுக்கு அனுப்பி உள்ளேன்' என, கூறியுள்ளார்.வீடியோவை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் அளித்தார். ஆறு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ