உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குலசை கோவிலில் 3011 சுமங்கலி பூஜை

குலசை கோவிலில் 3011 சுமங்கலி பூஜை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகேயுள்ள குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் சேவா பாரதி தென்தமிழ்நாடு அமைப்பு சார்பில், ஆண்டு தோறும் சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சுமங்கலி பூஜை விழா நேற்று முன்தினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.இதில், 3011 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். கோவில் வளாகத்தில் அமர்ந்த பெண்கள் செம்பில் தண்ணீருடன் அதன் அருகே ஜாக்கெட் துணி, வளையல், மஞ்சள் கயிறு, கண்ணாடி, சீப்பு வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவில் முன்பு அமர்ந்திருந்த அனைவரும் பக்தி பாடல்கள் பாடி அம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, கும்மியடித்து குழவையிட்டு வழிபாடு செய்தனர். அதன்பின் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்பட ஏழு மாவட்டங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை