உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அறுந்து கிடந்த மின்கம்பி மிதித்து விவசாயி பலி

அறுந்து கிடந்த மின்கம்பி மிதித்து விவசாயி பலி

கயத்தாறு:கயத்தாறு தாலுகா, திருமங்கலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் மாரிமுத்து, 55, விவசாயி. நேற்று முன்தினம் காலை, தாயுடன் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை மாரிமுத்து மிதித்தார்.இதில் மின்சாரம் பாய்ந்து மாரிமுத்து உயிரிழந்தார். மாரிமுத்து குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதிகாரிகள் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ