உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நள்ளிரவில் முகமூடி கும்பல் வீடு புகுந்து நகை கொள்ளை

நள்ளிரவில் முகமூடி கும்பல் வீடு புகுந்து நகை கொள்ளை

துாத்துக்குடி : திருச்செந்துாரில் நள்ளிரவில் வீடு புகுந்து குழந்தைகள் பெண்களை அரிவாளால் தாக்கி மிரட்டி பணம் நகைகளை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது.துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே சண்முகபுரத்தை சேர்ந்தவர் யோவான்ராஜ் 33. தனியார் லாட்ஜ் பணியாளர். இவர் நேற்று முன்தினம் இரவில் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் மனைவி சுதாசெல்வி மற்றும் குழந்தைகள் இருந்தனர். வீட்டுக்கு உறவு பெண்களும் வந்திருந்தனர். வீட்டில் பெண்கள் மட்டும் இருப்பதை அறிந்த முகமூடி கும்பல் அதிகாலை 2:30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர்.அரிவாள், கம்பி ஆயுதங்களை காட்டி சுதாசெல்வி மற்றும் உறவினர் பெண்களை மிரட்டினர். சிலரை தாக்கினர். அவர்கள் அணிந்திருந்த மற்றும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ 60 ஆயிரம், மூன்று அலைபேசிகளை பறித்து சென்றனர். திருச்செந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்