உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குலசை தசரா விழாவில் ஜாதி கொடி ஏந்தி வர தடை

குலசை தசரா விழாவில் ஜாதி கொடி ஏந்தி வர தடை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழா, உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தசரா விழா, அக்., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 12ம் தேதி இரவு கடற்கரையில் நடக்கிறது.திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், திருச்செந்துார் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் முன்னிலையில் நேற்று நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அதிகாரிகள் மற்றும் தசரா குழு நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில், அதிகாரிகள் மற்றும் காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் விதிக்கப்பட்ட நிபந்தனைகளாவது:கோவில் விழாவுக்கு வருவோர், ஜாதி சம்பந்தப்பட்ட கொடிகள், ரிப்பன்கள், ஜாதிய தலைவர்களின் படம் பிரின்ட் செய்யப்பட்ட டிசர்ட் அணிந்து வர அனுமதியில்லை. இரும்பு ஆயுதங்கள் ஏதும் கொண்டு வரக் கூடாது. வழக்கத்தைவிட பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக குடிதண்ணீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்படும்.பார்க்கிங் வசதி குறித்து முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியிடப்படும். தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தற்காலிக கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமாக வழங்க வேண்டும். முடிகாணிக்கை செலுத்த தனிவழி அமைக்கப்படும்.பொதுமக்களுக்கு தனிவழியும், தசரா குழுக்களுக்கும் தனி வழி அமைக்கப்படும். தசரா திருவிழா குறித்து அனைத்து தகவல்களும் இணையதளத்தில் தெரிவிக்கப்படும். பஜார்களில் ஒலிபெருக்கி மூலம் நடனம் ஆட தவிர்ப்பது நல்லது.இவ்வாறு நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !