உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஓசிக்கு மது தர மறுத்த பார் ஊழியர் கொலை:தி.மு.க., பிரமுகர் தலைமறைவு

ஓசிக்கு மது தர மறுத்த பார் ஊழியர் கொலை:தி.மு.க., பிரமுகர் தலைமறைவு

துாத்துக்குடி:கோவில்பட்டியில் ஓசிக்கு மது தர மறுத்த ஒயின்ஷாப் பார் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தி.மு.க., பிரமுகர் தலைமறைவானார்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. காந்திநகரை சேர்ந்த முருகன் பார் நடத்தி வருகிறார். பாரில் குருசாமி 60, வேலை பார்த்து வந்தார். கயத்தாறு, சிதம்பரம்பட்டியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் மூக்கையா சில நாட்களாக அங்கு மது அருந்திவிட்டு பணம் தராமல் சென்றார். நேற்று மதியம் 2:00 மணிக்கு மூக்கையா மதுபான கடைக்கு வந்து மது கேட்டார். பணம் தந்தால் தான் தர முடியும் என பார் ஊழியர் குருசாமி தெரிவித்தார். இதனால் ஆத்திமுற்ற மூக்கையா மறைத்து வைத்திருந்த அரிவாளால் குருசாமியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தலைமறைவான மூக்கையாவை கோவில்பட்டி மேற்கு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை