உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சிறுவனிடம் அத்துமீறியவர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுவனிடம் அத்துமீறியவர் போக்சோ சட்டத்தில் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி புதுக்காலனி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தர்மதுரை, 24. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுவனின் பெற்றோர், நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து தர்மதுரையை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:சிறுவனிடம் நூறு ரூபாய் கொடுத்து கடையில் சிகரெட் வாங்கி விட்டு, மிட்டாய் வாங்கிக் கொள் என தர்மதுரை கூறியுள்ளார். கடையில் வாங்கிய சிகரெட் மற்றும் மீதிப்பணத்தை கொடுத்து விட்டு வீட்டுக்குச் செல்ல முயன்ற சிறுவனை இழுத்துப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். விசாரணையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதால், தர்மதுரை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை