மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள ஆட்டுச் சந்தையில் வாரம்தோறும் சனிக்கிழமை ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். டவுண் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆட்டுச் சந்தையில் ஆடு வாங்க வருவோர் மற்றும் விற்க வருவோரிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.ஆடு ஒன்றுக்கு 60 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூடுதலாக 40 ரூபாய் வசூல் செய்யபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கூடுதல் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, எட்டையபுரம் டவுண் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ஜ., வினர் ஆட்டுக் குட்டிகளுடன் முற்றுகையிட்டனர்.துாத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ., ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அவர்களுடன், டவுண் பஞ். தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.மனுவை பெற்றுக் கொண்ட செயல் அலுவலர் சுப்பிரமணியன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025