உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் சாலைமறியல்

காப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் சாலைமறியல்

துாத்துக்குடி:'துாத்துக்குடி மாவட்டத்தில், 2023 -- -24ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவில்பட்டி அருகே, மேலக்கரந்தையில், மதுரை -- துாத்துக்குடி நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீரென நேற்று காலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர்.போராட்டம் காரணமாக, மதுரை -- துாத்துக்குடி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.விவசாயிகள் சங்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:மாவட்டத்தில் 2023 - -24ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வரும் ராபி பருவத்திற்கு மக்காச்சோளம், கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய, வீரிய ஒட்டு ரக விதைகளை தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ