உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்!

குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பூமி பூஜையுடன் பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. விண்வெளி திட்டங்களில் தொடர்ந்து இஸ்ரோ வெற்றிக்கொடி நாட்டுவதால் பல நாடுகளும், இஸ்ரோ வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன. இதற்காக கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, நாடு முழுதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தியது. அதன் அடிப்படையில், காற்றின் வேகம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் குலசேகரன்பட்டினம் தேர்வானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xakyq48i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக, குலசேகரன்பட்டினம் அருகில் உள்ள கூடல்நகர், அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில், 2,230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இன்று (மார்ச் 05) பூமி பூஜையுடன் பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. அடுத்தாண்டு பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதே நாளில் ரோகிணி 6H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Loganathan Kuttuva
மார் 05, 2025 21:00

குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் ராக்கெட் செலுத்துவதற்கு தேவையான எரிபொருள் குறைவு .மேலும் அங்கு வசிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் .


Barakat Ali
மார் 05, 2025 20:56

பூமி பூஜையில் மற்ற மதங்களுக்கும் இடமில்லையா என்று அறிவாளிகள் யாரும் கேள்வி எழுப்பவில்லையா ????


தத்வமசி
மார் 05, 2025 19:14

முரசொலி மட்டும் படித்தால் எந்த அளவுக்கு கட்டுமானம் வளர்ந்துள்ளது என்று தெரியாது.


naranam
மார் 05, 2025 18:38

பூமி பூஜையெல்லம் செய்யக் கூடாது என்று அந்த ரவுடி வரலையா இதைத் தடுக்க?


Ramalingam Shanmugam
மார் 05, 2025 17:50

AIIMS என்னாச்சு முதலில் தொறங்க இல்லாவிட்டால் டெபாசிட் போய்விடும் பிஜேபிக்கு


Tetra
மார் 05, 2025 20:00

அட போய்யா எய்ம்ஸ் மொதல்ல‌ இடத்தை கொடுய்யா


Sampath Kumar
மார் 05, 2025 17:18

ஏன்டா நான் தெரியம் ஹான் கேக்கிறேன் எல்லா ராக்கெட் விஷத்தையும் தமிழ் நாட்டில் வந்து வைக்கிறீர்கள் ஏன் ? மற்ற மாநிலம் எண்ணார்த்துக்கு இருக்கு ? அவனுக எல்லாம் எ வாழ வேண்டும் தமிழன் மட்டும் ஆகவேண்டும் உங்க எண்ணம் என்ன ஏன்று லகு புரிந்து விட்டது ஆளும் பிஜேபி காரனின் சதி தான் இது வேறு என்ன ??


N Sasikumar Yadhav
மார் 05, 2025 18:48

கோபாலபுர சொம்புத் அவுர்களே ராக்கெட் ஏவுவதற்கு சாதகமான இடத்தில்தான் அமைக்க முடியும் . முரசொலி மட்டும் படித்துவிட்டு இங்கே கண்டதையும் பதிவிடக்கூடாது


S Ramkumar
மார் 05, 2025 16:47

எப்படி அரசாங்க அமைப்புக்கு சனாதன முறையில் பூஜை செய்தது எப்படி. தமிழக அரசு குழு அமைத்த்து விசாரணை. தர்மபுரி செந்தில் தலைமை தங்குகிறார். இஸ்லாமிய, கிருத்துவ மத மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் அனைத்த்து மத சடங்குகள் நிறைவேற்றப்பட்டனவா என்று விசாரணை


Tetra
மார் 05, 2025 20:02

இது மத்திய அரசு திண்டாட்டம். உங்க பருப்பு வேகாது


Varuvel Devadas
மார் 05, 2025 14:58

Nal Valthukal.


இறைவி
மார் 05, 2025 14:28

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இடம் என்பதால் இதே இடத்தில் ராக்கெட் தளம் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது. தமிழ் நாட்டில் அப்போதிருந்த காட்டுமர அமைச்சர்கள் ISRO மத்திய அரசின் நிறுவனம் என்பதையும் மறந்து அவர்களிடமே கமிஷன் கேட்டதன் பலன், ஏவுதளம் ஆந்திராவுக்கு போனது. நமது கழக ஆட்சியின் பெருமை அப்படி.


kulandai kannan
மார் 05, 2025 13:38

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயர் வைக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை