உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலி

மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலி

செய்துங்கநல்லுார்:வல்லநாட்டில் மொபட் மீது லாரி மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு உடையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர்நடராஜன் மகன் வேல்முருகன் (45) கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்ல மொபட்டில் உடையார்குளத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். நெல்லை - துாத்துக்குடி மெயின் ரோட்டில் வல்லநாட்டில் 'ரோட்டை கடக்க முயன்றபோது நெல்லையிலிருந்து துாத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி வேல்முருகனின் மொபட் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் பாளை., அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பொன்னன்குறிச்சியை சேர்ந்த மாயாண்டி மகன் மந்திரமூர்த்தி (39)கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ