உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடியில் 9 மணி நேரம் நிற்கும் பயணியர் ரயில் * மதுரைக்கு இயக்க எதிர்பார்ப்பு

துாத்துக்குடியில் 9 மணி நேரம் நிற்கும் பயணியர் ரயில் * மதுரைக்கு இயக்க எதிர்பார்ப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட மக்களின் தேவைக்கு ஏற்ப, போதிய ரயில் வசதிகள் இல்லை. சரக்கு போக்குவரத்து மூலம் அதிக லாபம் ஈட்டி தரும் துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.இந்நிலையில், துாத்துக்குடி ரயில் நிலையத்தில் தினமும் 9 மணி நேரம் சும்மா நிற்கும் பாசஞ்சர் ரயிலை, மதுரை வரை இயக்க வேண்டும் என தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.திருநெல்வேலி- துாத்துக்குடி பாசஞ்சர் ரயில், வண்டி எண்: 06667 -/ 06678 தினமும் காலை 7.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மணியாச்சி வழியாக காலை 9:00 மணிக்கு துாத்துக்குடி வருகிறது. அதன் பிறகு மாலை 6:20 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து புறப்பட்டு இரவு 8:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.இடைப்பட்ட 9 மணி நேரமும் அந்த ரயில் துாத்துக்குடியில் நிற்பதால் அதை மாற்று வழியில் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட பயணியர் நலச் சங்க செயலர் பிரம்மநாயகம் கூறியதாவது:திருநெல்வேலி -- துாத்துக்குடி பாசஞ்சர் ரயில் மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள் அதிகம் பயனடைகின்றனர். காலை 9:30 மணி முதல் மாலை 6:20 மணி வரை துாத்துக்குடியில் சும்மாவே நிற்கும் அந்த ரயிலின் பெட்டிகளை வைத்து காலையில் துாத்துக்குடியில் இருந்து மதுரைக்கும், மதிய நேரத்தில் மதுரையில் இருந்து துாத்துக்குடிக்கும் ஒரு பயணியர் ரயிலாக இயக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல்கிஷோரை சந்தித்து மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை