| ADDED : ஜூன் 11, 2024 08:48 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளான வள்ளுவர் நகர், கடலையூர் சாலை ஆகிய பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பல முறை அளித்து, பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி த.மா.கா., வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் நுாதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், அதிகாரிகள் கண்களை திறந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தாலுகா அலுவலகம் முன், கண்களில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கை மனுவிவை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திடீரென தோப்புக் கரணம் போட்டு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.