மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் மீனவ கிராமத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றி கடல் என்பதால் தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பஞ்சாயத்து மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம், 60 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.அந்த கிராம மக்கள் நேற்று காலி குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் நான்கு புறமும் கடல் உள்ள ஒரே கிராமம் புன்னக்காயல் தான். எங்கள் பஞ்சாயத்துக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை தொடர்கிறது. இதுதொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025