உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கார் - மூன்று சக்கர வாகனம் மோதி 7 வயது சிறுவன் உட்பட மூவர் பலி

கார் - மூன்று சக்கர வாகனம் மோதி 7 வயது சிறுவன் உட்பட மூவர் பலி

துாத்துக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 38. இவர், டூ -- வீலர் பொருத்திய மூன்று சக்கர வாகனத்தில் ஊர் ஊராக பழைய பேப்பர், அட்டை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்து, துாத்துக்குடியில் உள்ள கடையில் விற்பனை செய்வது வழக்கம்.சிலம்பரசன், அவரது மனைவி தங்கம்மாள், 35, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மாரியம்மாள், 60, முருகன் மகன் சதீஷ், 7, உள்ளிட்டோர் இந்த வாகனத்தில் நேற்று காலை சூரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டைகளை சேகரித்தனர்.அவர்கள் அங்கிருந்துபுறப்பட்டபோது, கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற கார், எதிர்பாராத விதமாக இவர்கள் வாகனம் மீது மோதியது. கார் அவர்கள் மீது மோதிய வேகத்தில் சாலையோரத்தில் கவிழ்ந்தது.விபத்தில் சதீஷ், தங்கம்மாள், மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிலம்பரசன், காரில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த செல்வராஜ், 55, அவரது மனைவி குமரிதங்கம், 49, மகன் ஜெனிட், 29, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சூரங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை