உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி பனிமயமாதா ஆலய விழா இன்று துவக்கம் * கொடிபவனி கோலாகலம்

துாத்துக்குடி பனிமயமாதா ஆலய விழா இன்று துவக்கம் * கொடிபவனி கோலாகலம்

துாத்துக்குடி:துாத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குவதை முன்னிட்டு நேற்று நகர வீதிகளில்அன்னையின் கொடி பவனி கோலாகலமாக நடந்தது. உலக பிரசித்தி பெற்ற துாத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.லட்சக்கணக்கான மக்கள் ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி மத நல்லிணக்க விழாவாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு 442ம் ஆண்டு பனிமய மாதா ஆலய பெருவிழா இன்று (26ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனைமுன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து காணிக்கை பவனி என்கிற கொடி பவனி கோலாகலமாக நடந்தது. . துாத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமை வகித்தார். ஆலய பங்குதந்தை ஸ்டார்வின் முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக வரும் கொடி பவனியின் போது எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்களை மக்கள் வழங்கினர். இன்று (26ம் தேதி) பனிமயமாதா ஆலய கொடியேற்று விழா நடக்கிறது. இதைமுன்னிட்டு காலை5 மணிக்கு முதல் திருப்பலி,5.45 மணிக்கு 2ம் திருப்பலி, 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. சிறப்பு திருப்பலிக்கு பிறகு பல ஆயிரக்கணக்கான மக்கள் மரியே வாழ்க கோஷம் முழங்க கொடியேற்றம் நடக்கிறது.மறை மாவட்ட ஆயர் ஸ்டீன் தலைமை வகிக்கிறார். ஆலய பங்குதந்தை ஸ்டார்வின் முன்னிலை வகிக்கிறார். முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். பின்னர் காலை 9.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பனிமய அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கப்படுகிறது. முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா முன்னிலை வகிக்கிறார். திரளான இறைமக்கள் பங்கேற்கின்றனர். மாலை 5.30 மணிக்கு முத்துநகர் மரியாயின் சேனையாளர்களுக்கான திருப்பலி நடக்கிறது.திருவிழா நாட்களில் தினமும் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசிர், நற்கருணை ஆசீர், திருப்பலி நடக்கிறது. முக்கிய திருவிழாவான 11ம் நாள் ஆகஸ்ட் 5 ம் தேதி அன்னையின் பெருவிழா நடக்கிறது. இரவு அன்னையின் திருவுருவப்பவனி நகரின் முக்கிய வீதிகளில் நடக்கிறது. அன்று காலையில் இருந்து தொடர்ந்து கூட்டு திருப்பலி, சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை