உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி --- மேட்டுப்பாளையம் வாரம் இரு முறை புதிய ரயில்

துாத்துக்குடி --- மேட்டுப்பாளையம் வாரம் இரு முறை புதிய ரயில்

மதுரை: துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி இடையே வாரம் இருமுறை விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.விரைவு ரயில் (16766) துாத்துக்குடியில் இருந்து வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:40 மணிக்கு வெள்ளி, ஞாயிறுகளில் மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் ரயில் (16765) மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு சனி, திங்கள்களில் துாத்துக்குடி வந்து சேரும்.இச்சேவை ஜூலை 20 முதல் துாத்துக்குடியில் இருந்து துவங்குகிறது. இந்த புதிய ரயிலின் துவக்க விழா ஜூலை 19 காலை 10:00 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது.இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோயம்புத்துார் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் செல்லும் ரயில் இரவு 10:50க்கு துாத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு அதிகாலை 1:15க்கு வந்து சேரும். காலை 6:30 மணிக்கு கோயம்புத்துார் வந்து சேரும்.மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி ரயில் இரவு 8:30 க்கு கோயம்புத்துார் வந்து சேரும். திண்டுக்கல்லுக்கு அதிகாலை 12:17 க்கு வந்து சேரும். திண்டுக்கல்லிலிருந்து 12:20 க்கு புறப்பட்டு மதுரைக்கு அதிகாலை 1:25 க்கு வந்து சேரும். இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ