உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கடன் தகராறில் டூவீலர் எரிப்பு: 2 பேர் கைது

கடன் தகராறில் டூவீலர் எரிப்பு: 2 பேர் கைது

தூத்துக்குடி:தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் மோகித் 20. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் 21, என்பவரிடம் ரூ. 2 ஆயிரத்து 500 கடன் வாங்கியிருந்தார்.நேற்று முன்தினம் பணத்தை திரும்ப கேட்டு ஆகாஷ் மற்றும் அவரது நண்பரான 17வயது சிறுவன், மோகித் வீட்டிற்கு சென்று அவரது தாயார் சாந்தியிடம் தகராறு செய்தனர். பின்னர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அவரது டூ வீலரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை