மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
திருச்செந்துார்: திருநெல்வேலி டவுன், நல்லமுத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன், 32. இவர், உடன்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். வழக்கம் போல பணி முடிந்ததும், டூ - வீலரில் நேற்று காலை திருச்செந்துார் நோக்கி சென்றார்.அப்போது, திருச்செந்துார் நடுநாலுமூலைகிணறு காந்தி தெருவை சேர்ந்த வனராஜ், 28; அவரது நண்பரான நாகர்கோவில் காதர் ஆகியோர் டூ - வீலரில் எதிரே வந்தனர். கல்லாமொழி சாலையில் சென்ற போது, எதிர்பாராத விதமாக இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், படுகாயமடைந்த மூவரும் திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, வழியிலேயே மகாராஜன், வனராஜ் உயிரிழந்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் காதர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்செந்துார் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025