மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
துாத்துக்குடி:வைகாசி விசாக நாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுதும் வழிபட்ட பலன், ஒரே நாளில் கிடைக்கும் என்பது ஐதீகம். விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, நீண்ட வேல்களால் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.சில பக்தர்கள் புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டிருந்தன. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி போலீஸ் தரப்பில் குழந்தைகளின் கைகளில் 'டேக்' கட்டப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.இதற்கிடையே, துாத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வகனி, 26 என்பவர் கடலில் நீராடிய போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடலில் மூழ்கினார். கோவில் பாதுகாப்பு பணியாளர்கள், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்ததை உறுதி செய்தனர்.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025