உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நீர்ப்பாசன சங்க தலைவரை வெட்டி கொன்றது யார்?

நீர்ப்பாசன சங்க தலைவரை வெட்டி கொன்றது யார்?

விளாத்திகுளம், : நீர்ப்பாசன சங்க தலைவர் துாத்துக்குடியில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகே பாலாறுபட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 57; கல்மேடு பகுதி நீர்ப்பாசன சங்க தலைவராக இருந்தார். விவசாய பணி மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்ற சண்முகசுந்தரம், அதன்பின் வீடு திரும்பவில்லை.அவரது குடும்பத்தினர் அருகேயுள்ள கிராமங்களுக்கு தேடிச் சென்றனர். இதற்கிடையே, பாலாறுபட்டியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கடற்கரை அருகே மண்பாதையில் சண்முகசுந்தரம் கொலை செய்யப்பட்டு, வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.விளாத்திகுளம் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சண்முகசுந்தரத்தின் சடலத்தை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை