உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.13 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணி தரமான முறையில் சீரமைக்கவிவசாயிகள் சங்கம் கோரிக்கை

ரூ.13 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணி தரமான முறையில் சீரமைக்கவிவசாயிகள் சங்கம் கோரிக்கை

பேய்க்குளம்: சாத்தான்குளம் அருகே நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் பொதுப் பணித்துறை மூலம் நடக்கும் ரூ.13 கோடி ரூபாய் திட்ட பணிகள் தரமாக கட்ட விவசாய சங்கத்தினர் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு செய்துள்ளனர்.திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட சுமார் 92 குளங்களில் மடை, கலுங்குகள் சீரமைத்தல், குளக்கரைகளை பலப்படுத்தல் உட்பட்ட பணிகளுக்கு நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் சுமார் 13 கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்க தீர்மானிக்கப்பட்டு அதன் பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் சுற்றுவட்டார மற்றும் மணிமுத்தாறு 3வது, 4வது ரீச் குளங்களில் மராமத்து பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் 3 1/2 கோடி செலவில் சுமார் 39 குளங்களில் மடைகள், கலுங்குகள் சீரமைத்தல், குளக்கரைகள் உயர்த்துதல் ஆகிய பணிகள் நடக்கிறது. இந்நிலையில் சாத்தான்குளம் பள்ளிவாசல் பத்து உடையார்குளத்தில் புதிய மடை கட்டும் பணிகளின் போது கான்கிரீட் பணிகளில் தரமற்று கட்டப்படுவதாகவும், கான்கிரீட் ஜல்லிக்கு பதிலாக பெரிய பெரிய கற்களை அடுக்கி பின்னர் கான்கிரீட் போடுவதாகவும் கூறப்படுகிறது. மணிமுத்தாறு 3வது, 4வது ரீச் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு தரமாக கட்டக்கோரி முதலமைச்சர் உட்பட்ட அமைச்சர், மாவட்ட கலெக்டர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.எனவே கோடிக்கணக்கில் செலவு செய்து நீர்வள, நில வள திட்டத்தின் கீழ் கட்டப்படும் இப்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு தரமாக கட்ட வேண்டும். மக்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தை பாதுகாக்க இப்பணிகள் எவ்வித முறைகேடுமின்றி தரமாக கட்டப்பட வேண்டும். இல்லையெனில் பெயரளவிற்கு கோ டிக்கணக்கான மக்கள் வரிப்பணம் வீணாவதேடு விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எவ்வித பயனுமின்றி இந்த திட்டப்பணிகள் இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்பில் நேரடி கவனமும் கட்டுமான பணிகள் தரமானதாகவும் இரு க்க வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகளும், மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி