மேலும் செய்திகள்
வாலிபர் கொன்று புதைப்பு நண்பர்கள் 4 பேர் கைது
05-Aug-2025
துாத்துக்குடி,:துாத்துக்குடியில், வாலிபரை கொலை செய்த நண்பர்கள் மூவரை, போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், பூபால்ராயபுரத்தைச் சேர்ந்தவர் விஜய், 23, உப்பள தொழிலாளி. இவர், நண்பர்களுடன், லயன்ஸ் டவுண் உப்பள பகுதியில் உள்ள ஒரு குடோனில், நேற்று முன்தினம் இரவு மது குடித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில், விஜயை, நண்பர்கள் கம்பால் அடித்து கொலை செய்தனர். நேற்று காலையில், விஜய் உடலை கைப்பற்றிய தென்பாகம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கொலையில் ஈடுபட்டது சுனாமிநகர் முத்து கவுதம், 23, பூபால்ராயபுரம் மரிய பெடலிஸ் சஞ்சய், 24, முத்துக்குமார், 23, என தெரிந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'விஜய், நண்பர்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்றும் அவர் தகராறு செய்தார். நண்பர்கள் விஜயை கம்பால் தாக்கியதில், அவர் மயங்கினார். இந்நிலையில், தப்பியோடிய முத்து கவுதம், மரிய பெடலிஸ் சஞ்சய், முத்துக்குமார் ஆகியோரை, எட்டு மணி நேரத்தில் கைது செய்தோம்' என்றனர்.
05-Aug-2025