உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 500 கிலோ கடல் அட்டை சாயர்புரத்தில் பறிமுதல்

500 கிலோ கடல் அட்டை சாயர்புரத்தில் பறிமுதல்

துாத்துக்குடி:துாத்துக்குடி சாயர்புரம்பகுதியில் சிலர் சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் உத்தரவில், வல்லநாடு வனச்சரகர் பிருந்தா தலைமையிலான குழுவினர் சாயர்புரம் காமராஜர் நகர் பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக, இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த சத்ய கணேஷ், 40, துாத்துக்குடியைச் சேர்ந்த சேவியர் பிரான்சிஸ், 40, ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், சாயர்புரம் போலீசாரிடம் அவர்களை நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். சத்யகணேஷ் சென்னை புழல் சிறையிலும், சேவியர் பிரான்சிஸ் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை