உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கொலை

வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கொலை

தூத்துக்குடி:விளாத்திகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டான். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடற்கரை கிராமம் வேம்பாரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அஸ்வின் குமார் 7. அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்தான். கடந்த இரண்டு தினங்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்துள்ளான். நேற்று காலையில் வீட்டில், கழுத்தில் கத்திக் குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். சம்பவம் நடந்த முத்துக்குமாரின் வீடு, கடலோர போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்புறம் உள்ளது. போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இங்கு பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலுக்கு செல்பவர்கள். காலையில் அனைவரும் தொழிலுக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியே இருந்த சிறுவன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை